உலகம்
Typography

வறிய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் மீண்டும் எபோலா தொற்று நோய் பரவத் தொடங்கியுள்ளது. ஏப்பிரல் 4 முதல் மே 13 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள்ளேயே இந்த எபோலா பாதிப்புக்கு 19 பேர் பலியாகியும் 39 பேருக்கு தொற்றியிருப்பது உறுதிப் படுத்தப் பட்டும் உள்ளது.

இத்தகவலை உலக சுகாதாரத் தாபனமான WHO வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 393 பேருக்கு எபோலா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப் பட்டுள்ளனர். முக்கியமாக இந்த எபோலா தொற்று நோய் காங்கோவின் எக்குவாத்தேயோர் மாகாணத்தின் பிக்கோரோ, இபோக்கோ மற்றும் வங்கட்டா ஆகிய சுகாதாரக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளின் கீழ் கட்டுப் படுத்தப் பட்டு பரவ விடாமல் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த எபோலா தொற்று நோய் இதுவரை சர்வதேசத்துக்கு எச்சரிக்கக் கூடிய பொதுமக்கள் சுகாதார ஆபத்து என்ற பிரிவுக்கு இன்னமும் வரவில்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

எனினும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தமது விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் காங்கோவைச் சேர்ந்தவர்களா, மேலும் அவர்களுக்கு எபோலா நோய்த் தொற்று உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படாத எபோலா ஆட்கொல்லித் தொற்று நோய் வௌவால், குரங்கு போன்ற விலங்குகளில் இருந்து ஆரம்பத்தில் மனிதனுக்குத் தொற்றியதாக நம்பப் படுகின்றது. இந்த எபோலா நோய் காற்றின் மூலம் இன்னொருவருக்குத் தொற்றுவது நிரூபிக்கப் படவில்லை என்ற போதும் உடல் தொடர்பு இரத்தம், விந்து அணுக்கள் மூலம் பரவக் கூடியதாகும்.

எபோலா நோய் குறித்த மேலதிக விபரங்களைக் காண்பதற்கான விக்கிபீடியா இணைப்பு : எபோலா நோய் விபரம் விக்கி

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்