உலகம்
Typography

அவுஸ்திரேலியாவில் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 22 வருடங்களில் இல்லாத ஒரு மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. வெள்ளிக்கிழமை தென்மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 சிறுவர்கள், தாய் மற்றும் தாத்தா பாட்டி அடங்கலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மார்கெரெட் ஆற்றுக்கு அருகே 700 இற்கும் குறைவான மக்கள் வாழும் ஒஸ்மிங்டன் என்ற கிராமத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என போலிசார் இதுவரை உறுதிப் படுத்தாத நிலையில் இது குறித்துத் தொலைபேசியில் தகவல் அளித்தவரது விபரத்தை வெளியிட போலிசார் மறுத்து விட்டனர். ஆனாலும் இதில் ஈடுபட்ட குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். 1996 இல் தஸ்மானியாவில் தனி ஒரு துப்பாக்கிதாரி 35 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிப் பாவனைச் சட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்டன.

இதை அடுத்து அங்கு இதுவரை ஒரு தனிநபர் கூடத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் படவில்லை என்பதுடன் இதனை முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஒரு முறை சுட்டிக் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தகவல் பெற கொல்லப் பட்ட குடும்பத்தினரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகின்றது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் விவசாயிகள் பயிர்களைக் கெடுக்க வரும் விலங்குகளை வேட்டையாட சொந்தமாகத் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப் படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்