உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உம் எதிர்வரும் ஜுன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பது என முடிவாகி உள்ளது. முன்னதாக இவ்விரு தலைவர்களுமே ஒருவரை இன்னொருவர் எதிரியாகப் பாவித்து அறிக்கைகள் விடுத்தவர்கள் ஆவர்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மன மாற்றம் காரணமாக வடகொரிய அதிபர் கிம் அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பிலும் பதிலுக்கு அமெரிக்கா உட்பட மேற்குலகம் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பிலும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அணுவாயுதங்களை மொத்தமாகக் கைவிடுவது என்று வடகொரியா முடிவெடுத்ததை அடுத்து டிரம்ப் அமெரிக்க சிறைகளில் இருந்த வடகொரிய அரசியல் கைதிகளை விடுவித்தார். பதிலுக்கு நன்றி தெரிவித்த கிம் தமது நாட்டு சிறைகளில் இருந்து சில அமெரிக்கர்களையும் விடுவித்தார். இதன் பின் இருவரிடையே இணக்கம் அதிகமானதுடன் அது இப்போது நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற நிலை வரைக்கும் வந்துள்ளது. இவ்விரு தலைவர்களும் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திக்கவிருப்பதை டிரம்ப் தனது டுவீட் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்