உலகம்
Typography

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது முதியவர் தன்னுடைய மரணம் தனது விருப்பப் படி நிகழ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அண்மையில் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்று இடம் பெயர்ந்திருந்தார்.

எந்தவித நோய் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும் இவர் இன்று வியாழக்கிழமை தனது விருப்பப் படி கருணைக் கொலையை சுவீகரித்துக் கொள்ளவிருக்கின்றார்.

1914 இல் இலண்டனில் பிறந்த டேவிட் குட்டால் 1948 இல் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேறி மெல்பேர்ன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பல துறைகளில் சிறந்து விளங்கிய இவர் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கூட பணியாற்றிய அனுபவம் மிக்கவர் ஆவார். இவர் தனது விருப்பம் போல் தன் மரணம் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கருணைக் கொலைக்கு அவுஸ்திரேலியா இடமளிக்காத காரணத்தால் இரு வருடங்களாக அடக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இச்சட்டத்துக்கு இடமிருப்பதால் அங்கு சமீபத்தில் இடம்பெயர்ந்து சுவிஸ் குடியுரிமையையும் பெற்றார். இன்னமும் சில மணி நேரங்களில் இவரது விருப்பப் படி பீத்தோவனின் 9 ஆவது சிம்போனி இசையைக் கேட்டப் படி ஊசி போட்டுக் கொண்டு இவர் தன் விருப்பப் படி மரணத்தை சுவீகரிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்