உலகம்
Typography

புதன்கிழமை மாலை கென்யாவின் நகுரு கவுண்டி மாகாணத்தில் உள படேல் என்ற அனைக்கட்டு திடீரென உடைந்து தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது.

இந்த வெள்ளத்தில் அணையின் கரையோரம் இருந்த நூற்றுக் கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப் பட்டதுடன் இதில் சிக்கி 27 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உடனடியாக விரைந்த மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் மீட்புப் பணியால் 40 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் பலியான 27 பேரினதும் உடல்கள் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மறுபுறம் போலந்து நாட்டில் வார்ஸாவ் பகுதியில் பெரிய டேங்கர் லாரி ஒன்று புதன்கிழமை இரவு விபத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. சறுக்கிக் கொண்டே சாலைத் தடுப்புக்களை மோதி பின்னர் சாலைக்கு நடுவே விழுந்து இது விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த டேங்கர் லாரி முழுக்க திரவ நிலையில் 12 டன் சாக்லெட் கலவை நிரப்பப் பட்டிருந்தால் விபத்தின் பின்னர் மொத்த சாக்லெட் திரவமும் சாலையின் இரு பக்கமும் ஆறாகப் பாய்ந்துள்ளது. இதனால் பல மணி நேரங்களுக்குப் போக்குவரத்துப் பாதிக்கப் பட்டுள்ளது. விபத்து நடந்து சற்று நேரத்தில் கடும் வெயில் காரணமாக சாக்லெட் கட்டியாகி இறுகியதால் சுமார் 8 மணி நேரங்களுக்குத் துப்பரவாக்கும் பணி இடம்பெற்றுள்ளது. மேலும் மிகவும் அரிதாக சாக்லெட் உற்பத்தி செய்யப் படும் நாடான போலந்தில் இந்த விபத்து காரணமாகக் குறித்த சாக்லெட் கம்பனிக்கு இலட்சக் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போலந்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த 4 வழி சாலையின் இரு பக்கமும் சாக்லெட் ஆறு உறைந்து விட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. சாலையுடன் ஒட்டி இருக்கும் சாக்லெட்டை அப்புறப் படுத்தக் கடும் சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்