உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை மாலை பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய 6 மாதக் கர்ப்பிணிப் பெண்ணான 24 வயதாகும் சமீனா சமூன் என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

கங்கா என்ற கிராமத்தில் இடம்பெற்ற குறித்த இசை நிகழ்ச்சியில் தான் எழுந்து நின்று பாட மறுத்த குற்றத்துக்காக இவர் சுடப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப் பட்ட வீடியோ கிளிப் இரு நாட்கள் கழித்து இன்று வியாழக்கிழமை தான் வெளி வந்துள்ளது. சமீனா சமூனை எழுந்திருந்து பாடுமாறு பணித்த நபர் தாரிக் அஹ்மெட் ஜட்டோய் என அடையாளம் காணப் பட்டுள்ளார். தான் கர்ப்பமாக உள்ள ஒரே காரணத்தால் எழுந்து நின்று பாட மறுத்த இப்பெண்ணை இந்நபர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளார். ஆனால் இது குறித்து வெளி வந்த வீடியோவில் சமீனா சமூன் எழுந்து நிற்க மறுத்த போதும் அசத்தலாகப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்த காரணத்தால் அவரது இடத்தில் பணத்தைக் கொட்டியுள்ளனர் மக்கள். பின்பு இவர் சற்று எழுந்த போதே துப்பாக்கியால் சுடப் பட்டார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதம் உள்ளதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் லர்கானோ ஊடகத்தில் முதலில் வெளி வந்த வீடியோ கிளிப் இஸ்லாமாபாத் மனித உரிமைகள் ஆர்வலரான கபில் தேவ் இனால் டுவிட்டரில் வெளியிடப் பட்டுள்ளது. கொலையை மேற்கொண்ட நபர் கைது செய்யப் பட்டு அவர் மீது FIR பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்