உலகம்
Typography

அண்மையில் சிரியாவின் டௌமா பகுதியில் ரஷ்யாவும் சிரிய அரசும் இரசாயன ஆயுதங்களைப் பொது மக்கள் மீது பிரயோகித்துப் பல உயிர்களைப் பலி கொண்ட குற்றச்சாட்டை ரஷ்யாவும் சிரியாவும் ஏற்க மறுத்திருந்தது.

ஆனால் இந்த இரசாயன ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிரியாவில் ஏவுகணைத் தாக்குதலை சந்திக்கத் தயாராகுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதில் உரைத்த ரஷ்யாவின் முக்கிய தலைவர்கள் தம்மீது சிரியாவில் அமெரிக்காவால் தொடுக்கப் படக் கூடிய எந்தவொரு தாக்குதலையும் சந்திக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் லெபனானின் ரஷ்யத் தூதர் சிரியாவைத் தாக்கக் கூடிய அமெரிக்க ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்துவோம் என்றும் சூளுரைத்துள்ளார். டிரம்ப் தனது டுவிட்டரில் சிரிய அதிபர் அசாத் ஒரு மிருகம் என்று முன்பு குறிப்பிட்டதைப் போன்று அண்மையை டுவீட்டிலும் இரசாயனத்தால் கொல்லும் விலங்கோடு ரஷ்யா நட்புறவு கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதிபர் டிரம்பின் அண்மைய டுவீட்டுக்களில் சிரியாவில் அமெரிக்கா யுத்தம் தொடுப்பதானால் அது மிக விரைவில் இடம்பெறும் அல்லது மிகத் தாமதமாக இடம்பெறும் என முரண்பாடாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை டௌமாவில் சிரிய அரசு இரசாயனத் தாக்குதல் செய்தமைக்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் டமஸ்கஸ்ஸுக்கு அருகே டௌமாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியாகியும் 40 பேருக்கும் அதிகமானவர்கள் நச்சுத் தன்மையால் பாதிப்புற்றும் இருந்ததாகப் புள்ளி விபரம் கூறுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்