உலகம்
Typography

பாகிஸ்தானின் பிராந்திய நலக் கல்வி நிறுவனம் ஒன்றில் திங்கட்கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜாவட் ஷரீஃப் உரையாற்றும் போது ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டு வரும் எண்ணம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்றுள்ளார்.

மேலும் இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஏனைய அண்மை நாடுகள் இணைந்து போரினால் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள ஆப்கானில் அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும் அழுத்தம் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் மண்ணில் ஸ்திரத் தண்மை ஏற்படுத்துவதைத் தனது தேவையாகக் கொண்டிராத அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்காகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் மாத்திரமே அங்கு செயற்பட்டு வருவதாக ஜாவட் ஷரீஃப் கடுமையாகச் சாடினார். தற்போது 3 நாள் உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமாகப் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் இவர். அங்கு 49 குழு உறுப்பினர் பங்கேற்கும் முக்கிய சந்திப்பில் இவர் கலந்து முன்நடத்திச் செல்கின்றார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவஜா ஆசிஃப் மற்றும் பிரதமர் ஷாஹிட் கக்கான் அப்பாஸி ஆகியவர்களுடனும் இவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை இனை மறுபடியும் ஆரம்பிப்பதற்கு பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே தமது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மிக நீண்ட பாரம்பரிய வலுவான உறவைக் கொண்டுள்ள ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே பிரிவினையை ஏற்படுத்த எந்தவொரு அரசியல் பிரச்சினையாலும் முடியாது என்றும் ஜாவட் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்