உலகம்
Typography

இன்று செவ்வாய்க்கிழமை பாலஸ்தீனப் பிரதமர் ரமி ஹம்டல்லாஹ் பயணித்த வாகனப் பேரணி ஒன்று காஸாவில் சென்று கொண்டிருந்த போது வீதிக் கரையோரம் இருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் பல வாகனங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

இது ஒரு தோல்வியைத் தழுவிய பிரதமரைக் கொல்வதற்கான முயற்சி என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதும் போராளிக் குழுக்களின் பிரதமரைக் கொல்வதற்கான வெற்றிகரமான தாக்குதல் இலட்சியமாக இது இருக்க வாய்ப்பில்லை என்றும் சந்தேகிக்கப் படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு போராளிக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இதன்போது பிரதமர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். எனினும் இச்சம்பவம் ஃபட்டாஹ் அரசியல் குழுவின் ரமல்லா இனைத் தலைமையாகக் கொண்ட அரசுக்கும், காஸாவின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல் போக்கை அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு முன்னர் தான் காஸாவுக்கு அருகே கடற்கரை உறைவிடங்களில் இருந்து ஹமாஸ் போராளிகளால் ஃபட்டாஹ் குழு விரட்டியடிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைவிட காஸாவின் பல முக்கிய பகுதிகளை எகிப்தின் ஆதரவுடன் இஸ்ரேலும் பல வருடங்களாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பாலஸ்தீனப் பிரதமர் ஹம்டல்லா பங்கு பற்றிய நிகழ்வில் பெயிட் லஹியா என்ற பகுதியில் அசுத்த நீரைக் குடிநீர் ஆக்கும் பூரணமான தொழிற்சாலையை அமைக்கும் திட்டம் தொடர்பில் பேசப்பட்டது. இதன் மூலம் சுமார் 400 000 காஸா குடிமக்கள் பயனடையவுள்ளனர், ஆனால் இதிலுள்ள மிகச் சவாலான விடயம் என்னவென்றால் இந்தத் தொழிற்சாலைக்கான சக்தி வழங்கலை இஸ்ரேலின் மின் உலை ஒன்றில் இருந்து மின் தொடர்பு மூலம் பெற வேண்டி இருப்பதாகும். இதில் கடந்த காலத்தில் மிகச் சரியான விதத்தில் இஸ்ரேல் ஒத்துழைக்காத காரணத்தால் குறித்த ஆலையில் நிலத்தடி நீர் கடலுடன் சென்று கலந்து உள்ளூர் தண்ணீர் விநியோகத்தை மிகவும் மாசமடையச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்