உலகம்
Typography

அமெரிக்க வெளியுறவுச் செயலரான ரெக்ஸ் டில்லர்சனைப் பதவி நீக்கம் செய்த அதிபர் டிரம்ப் அவரது இடத்துக்கு சி ஐ ஏ உளவுப் பிரிவின் இயக்குனரான மைக் போம்பேயோ இனை நியமித்துள்ளார்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தான் வெளியுறவுச் செயலராகப் பதவி ஏற்றிருந்த ரெக்ஸ் டில்லர்சனிடம் பதவி நீக்கம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப் படவில்லை என்று தெரிய வருகின்றது.

மேலும் அமெரிக்கா வடகொரியா இடையேயான உறவு வலுப்பட்டு வரும் நிலையில் தனது பதவியில் தொடர்ந்து நீடிக்கவே ரெக்ஸ் டில்லரசன் விரும்பினார் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இவரது இடத்துக்கு சி ஐ ஏ இயக்குனர் நியமிக்கப் பட்டுள்ளதனால் சி ஐ ஏ இன் முதல் பெண் இயக்குனராக கினா ஹாஸ்பல் என்பவரையும் டிரம்ப் நியமித்துள்ளார். டிரம்ப் மேலும் தனது டுவிட்டரில் டில்லர்சனின் பணிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை ஆதரித்தது மற்றும் வடகொரிய விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடும் மனக் கசப்புமே டிரம்ப் டில்லர்சனைப் பதவி விலக்கக் காரணமாக அமைந்தது என்றும் தெரிய வந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்