உலகம்
Typography

சீனாவில் ஒருவர் 2 முறை மாத்திரமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்ற சட்டம் 1990 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது.

ஆனால் இந்தச் சட்டத்தை ஞாயிற்றுக்கிழமை சீனா நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ் அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் பின் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தற்போதைய சீன அதிபரான ஜீ ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கான வழி அங்கு திறந்துள்ளது.

ஆக்டோபரில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் போது அடுத்த அதிபரின் பெயரை மும்மொழியும் நடைமுறையைத் தவிர்த்திருந்த ஜீ ஜின்பிங் தற்போது கம்யூனிசக் கட்சி நிறுவனரும் சீனாவின் தன்னிகரற்ற தலைவருமாகவும் விளங்கிய மா சேதுங்குக்கு இணையான அதிகார நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

சீனாவின் எந்தவொரு முக்கியமான அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் படைத்த அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்தத் தீர்மானம் மூலம் 2023 இல் பதவிக் காலம் முடியவுள்ள அதிபர் ஜீ ஜின்பிங் இன் ஆட்சி கால வரையறையின்றி நீடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஜீ ஜின்பிங் வசம் சி.பி.சி என்ற சீனக் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பதவி. முப்படை இராணுவத்தின் தலைவர் மற்றும் சீன அதிபர் என்ற மிக முக்கிய 3 அதிகாரங்கள் உள்ளன என்பதும் நோக்கத் தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்