உலகம்
Typography

பாகிஸ்தானில் முன்பு இராணுவ ஆட்சி நிலவிய போது அதிபராகப் பணி புரிந்த முஷாரப் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நாட்டு சிறப்பு நீதி மன்றம்.

2007 ஆம் ஆண்டு பர்வேஸ் முஷாரப் அதிபராகக் கடமையாற்றிய போது அரசியல் நெருக்கடி காரணமாக அவசர நிலைப் பிரகடனம் செய்திருந்தார். இதனால் நூற்றுக்கும் அதிகமான நீதிபதிகல் பதவி நீக்கம் செய்யப் பட்டனர்.

இது ஒரு தேசத் துரோகம் என்று குற்றம் சாட்டப் பட்டு 2013 ஆம் ஆண்டு முதல் விசேட நீதி மன்றம் ஒன்று அமைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டு வந்தது. இதன் முடிவில் அண்மையில் தற்போது டுபாயில் இருக்கும் முஷாரப்பைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் பிரிட்டனிலும் டுபாயிலும் உள்ள அவரது சொத்துக்களை முடக்கவும் 3 நீதிபதிகள் கொண்ட இந்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டே தான் கைது செய்யப் படுவதைத் தவிர்க்க முஷாரப் மருத்துவ சிகிச்சையைக் காரணம் காட்டி டுபாய் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரைக் கைது செய்ய அரசு ஆவன செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள நீதிமன்றம் டுபாய் அரசுடன் ஒப்பந்தம் மூலம் முஷாரப்பை நாடு கடத்தும் நடவடிக்கைகள் குறித்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது தவிர பாகிஸ்தான் முன்னால் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாகவும் முஷாரப் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்