உலகம்
Typography

தன் மீது சுமத்தப் பட்ட நிதி மோசடியை ஏற்றுக் கொண்ட மொரீஷியஸ் பெண் அதிபர் குரிப் பாஹிம் தனது பதவியைத் துறக்கவுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய தீவு நாடான மொரீஷியஸின் முதல் பெண் அதிபராக 2015 ஆம் ஆண்டு அமினாஹ் குரிஃப் பாஹிம் பதவி ஏற்றிருந்தார். இவருக்கு அரசு சார்பா அமைப்பு NGO அமைப்பு ஒன்றால் வழங்கப் பட்ட வங்கிக் கணக்கை இவர் முறைகேடாகப் பயன்படுத்தி அதிக செலவு செய்ததது அம்பலமாகியுள்ளது.

அதாவது இவருக்கு செலவுக்காக வழங்கப் பட்ட வங்கி அட்டை (credit card) இனைத் தவறாகப் பயன்படுத்தி அதிகளவு துணி, தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்களை இவர் வாங்கிக் குவித்துள்ளார். இது கிரெடிட் கார்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. 58 வயதாகும் குரிப் பாஹிம் நாட்டு நலன் கருதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி மொரீஷியஸ் தனது 50 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவுள்ளது. இதனால் இக் கொண்டாட்டத்தை அடுத்துத் தனது பதவியைத் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக குரிப் பாஹிம் தெரிவித்துள்ளார். குரிப் பாஹிம் ஒரு விஞ்ஞானியும் உயிரியலாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவருக்கு வங்கி அட்டை வழங்கிய NGO நிறுவனம் சர்ச்சைக்குரிய அங்கோலா நாட்டு கோடீஸ்வரரான அல்வாரோ சொப்ரின்ஹோ என்பவரால் இயக்கப் பட்டு வருகின்றது. மேலும் இவர் மீதும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்