உலகம்
Typography

சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அங்குள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் போர் விமான ஜெட் ஒன்றினை சிரியப் படைகள் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் ஈரானின் ஆளில்லா விமானம் ஒன்றினை நடுவானில் இஸ்ரேல் தாக்கி அழித்தத்துக்குப் பதிலடியாக மேற்கொள்ளப் பட்ட ஒன்று எனத் தெரிய வருகின்றது.

இச்சம்பவம் ஆனது சிரியாவில் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரமான மோதல் போக்கை வெளிப்படுத்துகின்றது என பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் டாம் பேட்மேன் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப் பட்ட போது ஏற்பட்ட வெடிச் சத்தங்களை இஸ்ரேலின் வசமுள்ள கோலன் ஹைட்ஸ் மற்றும் வடக்கு இஸ்ரேலிலும் கேட்கப் பட்டதாகவும் இது தவிர ஜோர்டான் மற்றும் சிரியா உடனான இஸ்ரேல் வான் பரப்பில் பல எதிர்த் தாக்குதல் சம்பங்களைக் கூட அனுமானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொடர் சம்பவங்கள் காரணமாக ஏற்கனவே பகை நாடுகளாக இருக்கும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு புதிய மோதல் களம் உருவாகி வருவதாக அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்