உலகம்
Typography

மாலைதீவில் தற்போது உச்சக் கட்ட அரசியல் குழப்ப நிலை நிலவி வருகின்றது.

மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அங்கு பல நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதுடன் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும் இது தொடர்பில் விளக்கம் அளிக்க சிறப்பு தூதுவரை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் இக்குழப்ப நிலையில் இந்தியா தலையிட்டு தனது இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் என மாலைத் தீவின் முன்னால் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை முன் வைத்ததால் சீனாவின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தியா தனது சிறப்புப் படையினை மாலைத் தீவுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் ஊகங்கள் எழுந்த நிலையில் சீனா இவ்விடயத்தில் 3 ஆம் தரப்புத் தலையிடத் தேவையில்லை என்றும் மாலைத் தீவு போர்க் களமாக மாறுவதைத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அரசியல் நெருக்கடியைச் சரி செய்ய இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது. மாலைத் தீவில் அவசர நிலை 15 நாட்களுக்குப் பிரகடனப் படுத்தப் பட்ட பின் உடனடியாக முன்னால் அதிபர் அப்துல் கயூம் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரை போலிசார் கைது செய்தனர். இதனால் அங்கு முழு அதிகாரமும் இராணுவம் வசமானது. இந்நிலையில் மாலை தீவில் அமைதியை ஏற்படுத்தும் முகமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்