உலகம்
Typography

முன்னால் தென்கொரிய அதிபரான பார்க் கெய்ன் ஹை இற்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை பெற்ற பிரபல சாம்சுங் நிறுவனத்தின் நிர்வாகி ஜே ஓய் லீ மேன் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 ஆண்டு மேலதிக சிறைத் தண்டனை நீக்கப் பட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தென்கொரியாவை அதிர்ச்சி அடையச் செய்த ஊழல் வழக்கான இதில் சாம்சுங் குழுமத் தலைமை நிர்வாகி ஜே வொய் லீ உட்பட 4 முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் மற்றும் அதிபருக்கே இலஞ்சம் கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

கடந்த வருடம் பெப்ரவரி 7 இல் லீ கைது செய்யப் பட்டு கிட்டத்தட்ட ஓராண்டுத் தண்டனையின் பின் அவர் விடுவிக்கப் பட்டுள்ளார். இந்த வழக்கில் தென் கொரிய முன்னால் அதிபர் பார்க் கெயின் ஹை உம் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சுங் நிறுவனத்தைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக வழிநடத்தி வரும் லீ தென் கொரியாவின் மிகப் பெரிய செல்வந்த குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் ஆவார்.

Most Read