உலகம்
Typography

மாலை தீவில் தீவிரவாதம் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்ட முன்னால் அதிபர் முகமது நஷீத் உட்பட 9 பேரை விடுவிக்கக் கோரி அரசாங்கத்துக்கு அந்நாட்டு சுப்ரீம் நீதிமன்றம் கடந்த வியாழன் உத்தரவிட்டிருந்தது.

மேலும் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையில் அவரது ஆளும் கட்சியில் இருந்து விலக்கப் பட்ட 12 எம்.பி.க்களின் பதவி நீக்கம் செல்லாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நிலமை முறுகல் அடைந்து அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராகவே தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்யக் கூடிய நிலை தோன்றியதால் சுப்ரீம் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தப் போவதில்லை என அறிவித்த அதிபர் அப்துல்லா யாமீன் பாராளுமன்றத்தைக் காலவரை இன்றி மூடுவதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு முடிவையும் தடுக்க இராணுவத்துக்கு மாலை தீவு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலை தீவு பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் நீதிமன்றப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் அதிபர் அப்துல்லா யாமீன் 15 நாட்களுக்கு நாட்டில் அவசர நிலைப் பிரகடனப் படுத்தியுள்ளார். மாலை தீவு அரசின் இந்த செயற்பாடுகளால் அதிருப்தி அடைந்த மந்திரி ஹுஷைன் ரஷீத் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அதிபரின் நடவடிக்கை காரணமாக சுப்ரீம் நீதிமன்ற நீதிபதிகளும் அச்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read