உலகம்
Typography

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த வருடம் பதவியேற்றதும் தமது மண்ணில் தீவிரவாத சம்பவங்களைக் கட்டுப் படுத்தவும் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் என மிகவும் ஆபத்தான நாடுகள் என்று கருதிய 11 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகள் வருவதற்குத் தடை விதித்திருந்தார். இது அமெரிக்காவுக்கு உள்ளேயே கடும் விமரிசனங்களுக்கு உள்ளாகி இருந்தது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப் பட்டது.

இந்நிலையில் தற்போது எகிப்து, ஈரான், லிபியா, தென் சூடான், யேமென், சூடான், ஈராக், மாலி, வடகொரியா, சோமாலியா, சிரியா ஆகிய இந்த 11 நாடுகளில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்கும் முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இத்தகவலை அமெரிக்க உள்துறை அமைச்சக செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன் என்பவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் உறுதிப் படுத்தியிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த 11 நாடுகளுக்கான தடை நீக்கப் பட்ட போதும் இந்நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய முன்பிருந்ததை  விட அதிக சோதனைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதுடன் அவர்களது வாழ்க்கைப் பின்புலமும் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப் படும் எனவும் தெரிவித்தார். மேலும் மிக அவதானமாக அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் இதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு நாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவுள்ளது என்றும் நீல்சன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்