ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்!

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: சமூக நீதி அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: அநுர

“ராஜபக்ஷக்களினால்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால், ராஜபக்ஷக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்கள் தங்களைப் பாதுகாக்கவே ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்: ரவூப் ஹக்கீம்

“சஜித் பிரேமதாச வடக்கிலுள்ள எந்தக் கட்சியுடனும் வெளிப்படையாகவோ, இரகசியமாகவோ ஒப்பந்தங்கள் எதனையும் செய்துகொள்ளவில்லை” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சஜித் வடக்கிலுள்ள கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை: ரணில்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளார். 

Read more: செல்வம், சித்தார்த்தனுடன் ரணில் அவசரப் பேச்சு; ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட கோரிக்கை!

“தமிழ் மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ்த் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டுவிட்டார்கள்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: சுய இலாப அரசியலுக்காக தமிழ்த் தலைமைகள் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டனர்: டக்ளஸ் தேவானந்தா

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சுயமாக வாக்களிப்பவர்கள். மக்கள் திறமைசாலிகள். மக்களுக்கு அரசியல் தெரியும். விசேடமாக தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. மக்களுடைய கருத்தையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். மக்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதல்ல. நிதானித்து இருக்கின்ற அரசியல் நிலையில் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தோடும் நாட்டில் இருக்கும் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவது நாங்கள். நாங்கள் மக்களுடைய பிரதிநிதிகள். மக்கள் எங்களை தங்களது பிரதிநிதிகளாக நியமித்துள்ளார்கள். அந்த கடப்பாட்டை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் மக்களை சரியாக வழிகாட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிப்பார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்