வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. 

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிச் செயற்படுவதற்கு இராணுவம் உள்ளிட்ட முப்படையும் தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. 

“இனவாதத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் காவியுடை தரித்த மத அடிப்படைவாதிகளை நான் பௌத்த பிக்குள் என்று அழைப்பதில்லை.” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்குவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முனைப்புக் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது முறையான நடவடிக்கை அல்ல என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 

திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தின் இடம்பெற்றது. 

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார். 

More Articles ...

Most Read