வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முனைப்போடு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

“என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையே பொறுப்புக்கூற வேண்டும். எனது அமைச்சின் கீழான நடவடிக்கைகள் அனைத்தும், அமைச்சரவையின் முடிவுகளுக்கு இணங்கவே முன்னெடுக்கப்பட்டன.” என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா தெரிவித்துள்ளார். 

“அமைச்சுப் பதவியை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே எனக்கு வழங்கினார். அவர் கோரினால் பதவியிலிருந்து நான் விலகுவேன்.” என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

“தனிப்பட்ட குரோதங்களுக்கும் பதவியாசைக்கும் பேராசைக்கும் எம்மை அடிமைப்படுத்திக் கொண்டால் வரக்கூடிய விளைவுகளுக்கு எங்கள் எல்லோரதும் இதுவரையிலான நடவடிக்கைகள் சாட்சியமாக அமைகின்றன. வேறெங்கோ இருப்பவரின் பதவி ஆசையானது, எம்முள் சிலரை வழிநடத்திக் கொண்டிருக்கின்றதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகிய இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

பௌத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக புறப்பட்டதாக சொல்லிக் கொள்ளும் பொது பல சேனா அமைப்பு, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாதாள உலகக் குழுக்களினை இணைத்துக் கொண்டுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read