இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு கிடைக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13வது நாளாக தொடர்கின்றது. 

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது. 

உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில், இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. 

More Articles ...

Most Read