காணாமற்போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின், அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28ஆம் திகதி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். 

“இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் அரசாங்கம் முப்படையை வலுவூட்டும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் சுமார் 1800 சட்டவிரோதக் கட்டடங்கள் காணப்படுவதாக பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. 

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

More Articles ...

Most Read