“புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் இதுவரை பேசவில்லை. புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏதும் எமது கட்சிக்கும் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவிட்டமாக அறிவித்துள்ளார். 

‘தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு, கட்சிகள் பிடிவாதங்களைத் தளர்த்த வேண்டும்’ என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது. 

“மத்தியில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை எந்தக் கட்சியும் எம்மிடம் கோரவில்லை. புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளவர்கள் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுப்போம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

“மத்தியில் நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும், நிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது. 

More Articles ...

Most Read