இந்தியா வழங்கிய அழுத்தத்தின் பிரகாரமே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பதிலளிக்க இந்திய தூதரகம் மறுத்துள்ளது.  

Read more: ‘இந்திய அழுத்தத்திற்கு இலங்கை அடிபணிந்தது’ எனும் ராஜிதவின் கருத்துக்கு இந்திய தூதரகம் பதிலளிக்க மறுப்பு!

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட யுத்த காலத்தில் கணவனை இழந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். 

Read more: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது; கணவனை இழந்த பெண் வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் கீரிமலையில் புதிய மீன்பிடித் துறைமுகம் எதனையும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  

Read more: கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை: மஹிந்த அமரவீர

குமாரபுரம் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கடிதமொன்றை எழுதியுள்ளார். 

Read more: குமாரபுரம் படுகொலை வழக்கு; தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அதனை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், நிதி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: குண்டு வைக்கப்போவதாகக் கூறும் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி: லக்ஷ்மன் யாப்பா

மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ எனும் ஆய்வு நூல் நாளை சனிக்கிழமை (ஒகஸ்ட் 06, 2016) வவுனியாவிலும், பிரித்தானியாவின் இலண்டனிலும் வெளியிடப்படவுள்ளது.  

Read more: மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூல் வெளியீடு!

வடக்கு- கிழக்கில் விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை அமைப்பதைக் காட்டிலும், போரினால் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே அத்தியாவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கில் விகாரைகளை அமைப்பதைக் காட்டிலும் மக்களின் வாழ்வை மீளமைக்க வேண்டியது அவசியம்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்