இலங்கையின் இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருப்பது, ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று ராஜித சேனாரத்ன கூறுவது ஐ.நா.வை ஏமாற்றும் செயல்: செல்வம் அடைக்கலநாதன்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பேட் லம்மீர்ற்க்கும் (Norbert Lammert) எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

கொழும்பு மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்வரும் 07ஆம் திகதி முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

Read more: மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: போர்க் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை: ராஜித சேனாரத்ன

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு முரணாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் வைத்து தக்க பதில் வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி- ரணிலின் ஐ.நா. தீர்மானத்துக்கு முரணான கருத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் பதில்; இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது, சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலங்கைக்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். 

Read more: காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்