மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள 20வது திருத்தச் சட்டத்தினை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. 

அரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது சம்பந்தமாக இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது எதிர்காலத்துக்கே செல்லுபடியாகும். கடந்த காலத்துக்கு எந்த வகையிலும் செல்லுபடியாகாது“ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணத்தை சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துள்ளார். 

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொள்ளையடித்து தானம் வழங்கினால் எந்த நன்மையும் கிடைக்காது என்று புத்த பகவானின் பிள்ளைகளுக்கு சொல்லத் தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

20வது திருத்தச் சட்டத்தை தவற விட்டால் விமோசனம் கிடைக்காது. எனவே, கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு திடன் கொண்டவர்களாக முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read