இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நல்ல மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பயணத்துக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என்று தங்களை அழைத்துக் கொண்டு மூலையில் இருக்கும் தரப்பினர், ஒன்று மக்களோடு இருக்க வேண்டும். அல்லது திருந்த வேண்டும். இல்லையாயின், வீழ்ந்தாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் வரலாற்றை உலகறியச் செய்யும் நோக்கில் ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று வடக்க மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்க முனைப்புக்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 

More Articles ...

Most Read