உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை வரும் ஜனவரி மாதத்துக்குள் நடத்துவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தால், அதனடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 

வடக்கு- தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள் தொடர்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்கள் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும், 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நாட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக காலமும், உலகத்தினது ஒத்துழைப்பும் அவசியமாகின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி மாதம் நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

‘சில்’ துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு- கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. 

More Articles ...

Most Read