வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சிலரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் புத்த பெருமானின் சிலைகள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கப்படுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தினால் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையேதும் இல்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  

ஒற்றையாட்சியின் கீழ் அனைவரதும் ஒத்துழைப்புடன் ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் மூலம் நாட்டில் நிலவுகின்ற சமச்சீரற்ற நிலையை அகற்றி, அனைவரும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

புதிய அரசியலமைப்பினை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளமையைக் கண்டித்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

மோசடியில் ஈடுபட்டதற்காக பாதுகாப்பு படைகளிலிருந்து துரத்திவிடப்பட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெறும் பல்வேறு குழப்பங்களுக்கு அவர்களே காரணம் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.  

More Articles ...

Most Read