வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நல்ல மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அந்த அமைப்பின் மீதான தடையை விலக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் எலினோர் ஷாப்ரென் (Eleanor Sharpston)   பரிந்துரை செய்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு ‘வெண்தாமரை’யை சின்னமாக கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்களிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read