முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடர்கிறது. 

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. 

தமிழ் மக்களை மாத்திரமல்ல சர்வதேசத்தையும் நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இன, மத, சாதி பேதம் போன்ற வரையறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களையும் சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 04; தமிழ்த் தேசிய இனத்தின் துக்கதினம்.’ என்னும் அடையாளக் கோசத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் 69வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read