இனவாத அடிப்படையில் சில கட்சிகள் தமது யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

“இனவாத அடிப்படைகளை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கக் கூடாது. சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல கட்சிகளும், குழுக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) அரசியலமைப்பு நிர்ணய சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

‘ஸ்ரீலங்கா (இலங்கை) சுதந்திரமும், இறைமையும், தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏகிய இராஜ்ஜியமாக/ ஒருமித்த நாடு’ எனும் குடியராசாக இருக்க வேண்டும்’ என்று அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

புதிய அரசியலமைப்புக்கான பொது வாக்கெடுப்பில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் தரத்தைக் குறைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read