“எழுக தமிழ் போராட்டத்துக்கான பரப்புரையின்போது நாம் சந்தித்த மக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, அதற்கான காத்திரமான செயற்திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.” என்று எழுக தமிழ் போராட்டத்தின் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: எமது தேசிய அரசியலுக்காக வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்: ‘எழுக தமிழ்’ பிரகடனம் வலியுறுத்தல்!

தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றறில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பித்தது. 

Read more: ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார்: லக்ஷ்மன் கிரியெல்ல

“ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை, முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.மு பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்: சஜித்

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றார் என்பதே எமக்கு முக்கியம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும் பேசத் தயார்; சஜித் தரப்பிடம் சம்பந்தன் திட்டவட்டம்!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி குறைத்து மதிப்பிடும் தரப்புக்களுக்கு பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டி ஏற்படும்.” என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: மைத்திரி

தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்தி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகி திலீபனின் 32வது வருட நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது. 

Read more: தியாகி திலீபனின் 32வது நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்