கூட்டு எதிரணி எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த ஆதரவாளர்களை பழிவாங்கவில்லை: துமிந்த திசாநாயக்க 

தமிழ் மக்களுக்காக போராடி தங்களது உயிர்களை ஈய்ந்த மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்காத நாட்டில், நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும் என்று முன்னாள் போராளி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்காத நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும்?; முன்னாள் போராளி கேள்வி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அறிவித்துள்ளது.  

Read more: சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார்: கூட்டு எதிரணி

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் போராளிகள் சிலரை யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் மருத்துவர் குழுவை வைத்து பரிசோதனை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  

Read more: விச ஊசி விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை அரசாங்கம் நிராகரித்தது!

நாட்டில் நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து, சுபீட்சமான நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பிரச்சினைகளற்ற நாட்டினை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர்துறை அரசியல் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் மற்றும் சிவரதி உள்ளிட்ட மூன்று முன்னாள் போராளிகள் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பிய பின்னர்தான் நோயினால் தாக்கம் பெற்றனர் என்று கூறுவது பொய்யாகும் என்று முன்னாள் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்துள்ளார்.  

Read more: தமிழினி, புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்: தமிழ்கவி

இலங்கை அரசியல் வரலாற்றில் கட்சியை பிளவுபடுத்திச் சென்று ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியவர்கள் யாருமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள்; ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு இல்லை: மைத்திரிபால சிறிசேன

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்