பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பெருவாரியான ஏற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கும், குடியியல் சுதந்திரங்களுக்கும் பெரும் பாதிப்பை விளைவிக்க கூடியன என ‘மக்கள் போராட்டம்’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும்: மக்கள் போராட்டம் அமைப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெற்றிபெறுவார் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் வேட்பாளரே வெற்றி பெறுவார்: அஜித் பி பெரேரா

“தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது முடிந்து போன விடயம். அது குறித்து இனிமேலும் யோசிப்பது அர்த்தமற்றது. தேர்தலுக்கு முகம் கொடுக்கும் காலம் நெருங்கியுள்ளது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து சிந்திக்கவில்லை: ரணில்

“எமது மக்களின் சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசாங்கமும் இராணுவமும் உதாசீனம் செய்ய முடியாது. எனவே, வீராப்பு வசனங்களை நிறுத்திவிட்டு எமது மக்களின் கோரிக்கையை அரசாங்கமும் இராணுவமும் நிறைவேற்ற வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: எமது நிலம் எமக்கு வேண்டும்; இராணுவத்தின் வீராப்பு வசனங்களை கேட்க நாங்கள் தயாரில்லை: இரா.சம்பந்தன்

2020- 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: நிலையான அபிவிருத்திக்கு நிவாரணம் அதிகளவில் தேவை: மங்கள சமரவீர

“அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவதற்காக விண்ணப்பித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் பொய்யான விடயம். பிரஜாவுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் சமர்ப்பித்திருந்தால் அமெரிக்க கடவுச்சீட்டையையும் ஒப்படைக்க வேண்டுமென்பது அந்நாட்டுச் சட்டமாகும். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதும் செல்வதும் அமெரிக்கக் கடவுச்சீட்டிலே.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்கக் கடவுச்சீட்டிலேயே பயணம் செய்கிறார்: விஜித ஹேரத்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள கனேடியப் பிரஜையான ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார். 

Read more: அமெரிக்கப் பிரஜாவுரிமையை துறக்கும் கோட்டாவின் முடிவில் என்னுடைய வழக்கு தாக்கம் செலுத்தாது: ரோய் சமாதானம் (பேட்டி)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்