இலங்கை
Typography

ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டணிக் கட்சிகளிடமும் கருத்துக் கேட்டிருக்கலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்தி கூட்டணி அமைத்த கட்சிகளிடம் கருத்துக் கேட்காமல், உயர்நீதிமன்றத்தை அணுகியிருப்பது அசௌகரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் கொண்டதா அல்லது ஆறு ஆண்டுகள் கொண்டதா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார். அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டாறு கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்