இலங்கை
Typography

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘சூரியன்’ சின்னத்தில் போட்டியிடும் அணியினர் ‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரினைப் பாவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், தமது கட்சியின் பெயரை ஒத்த, மக்களைக் குழப்பக்கூடியதாக பெயராக ‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ அமைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்தே, ‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரைப் பாவிப்பதற்கு தடை விதித்துள்ளது.

Most Read