இலங்கை
Typography

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்காமல், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பேரவை தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப்.போடு இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிய தேர்தல் கூட்டணியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கான சின்னத்தை தெரிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்