இலங்கை
Typography

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்று ரெலோ அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவித்துள்ள நிலையிலேயே, புதிய தேர்தல் கூட்டணிக்கான பேச்சு இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென்கிற முடிவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஏற்கனவே வந்துள்ள நிலையில், ரெலோவும் இணைந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி: ஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்