இலங்கை
Typography

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ) வெளியேறியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விலகிய நிலையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பில் கடந்த சில நாட்களாக, தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது.

யாழ்ப்பாணத்தில் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும், ஆசனப்பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு காணப்படவில்லை. தமிழரசுக் கட்சி தமக்குரிய அங்கீகாரங்களை வழங்கவில்லை என்று ரெலோவும், புளொட்டும் அதிருப்தி வெளியிட்டன. இதனையடுத்து, எந்த முடிவும் எடுக்கப்படாமல் பேச்சுக்கள் நிறைவுக்கு வந்தன.

இந்த நிலையில், வவுனியாவில் நேற்று நள்ளிரவு ரெலோவின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பிலிருந்து விலகி போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்