இலங்கை
Typography

சர்வதேச தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க விசேட பாதுகாப்புப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன், இலங்கையில் சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியன இந்தப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸார் (இன்ரபோல்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சாகல ரத்நாயக்க இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது நாடு நேரடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாத போதிலும், தெற்காசியா, ஆசியாவின் ஏனைய வலயங்களில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத் தாக்குதல்களை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இதனால் தான் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல், இலங்கையின் குடிவரவு குடியகல்வு கட்டமைப்பு சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளக் கட்டமைப்புடன் தற்போது தொடர்புபட்டுள்ளது. இன்ரப்போலினால் சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள எவரும் நாட்டுக்கு நுழைய முடியாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்