இலங்கை
Typography

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல் நடைபெறும் தினம் ஞாயிறு அல்லது அரச விடுமுறையாக அல்லாத ஒரு தினத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, “97 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் இருந்த அச்சு பிழைகள் காரணமாக மீண்டும் குறித்த மன்றங்களை வர்த்தமானியில் உள்ளிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவை கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டன. அதன்படி இன்றையதினம் (திங்கட்கிழமை) வரை 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை வெளியிடுவதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேர்தலுக்கு 75 நாட்கள் உள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் பரீட்சைகளில் தோற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். வாகன பேரணி மற்றும் மக்கள் பேரணிகளை நடத்த அனுமதியில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்