இலங்கை
Typography

யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமகால அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கின்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நன்கு அறிவர். அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றது. எதிர்க்கட்சியினர் வழமைபோன்றே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அவை காத்திரமானவை அல்ல”, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Most Read