இலங்கை
Typography

நாட்டில் நீடித்து வரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டியது அத்தியாவசியமானது என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பல தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்திருந்த அரச வருமானம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதிகரிக்க முடிந்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் மேலதிக நிதியைக் கொண்டிருந்த நாடு இன்று 700 கோடி ரூபாய் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கென ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்ய 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் புதிதாக ஏழு பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.“ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்