இலங்கை
Typography

“அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது அல்ல. மாறாக, நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் உள்ள 9 மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். பெரும்பான்மை மக்களிடம் உள்ள அதிகாரங்களை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாக நாட்டில் தவறான ஒரு கருத்து நிலவுகின்றது. இதில் எந்த உண்மையும் இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் புதிய அரசியல் அமைப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்