இலங்கை
Typography

‘தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கம். அதனை கட்சியாக இயங்க அனுமதிக்க முடியாது’ என்று வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து ஆராயப்பட்டது.

அதன்போது, தமிழ் மக்கள் பேரவை தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் கூட்டணி தொடர்பிலான உரையாடலில் பங்கேற்காமல் வெளியேறிய சி.வி.விக்னேஸ்வரனிடம், புதிய கூட்டணி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதன்போது பதிலளித்த முதலமைச்சர், “தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அந்த இயக்கத்தினை அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது. அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியாது.” என்றுள்ளார்.

Most Read