இலங்கை
Typography

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச வேண்டிய தேவையில்லை. ஏனெனில், அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பலரும் பல தடவைகள் பேசிவிட்டனர்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது, அங்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அழைப்பு விடுத்தார். குறித்த அழைப்பு தொடர்பில் பதிலளிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

என்னை பலவீனப்படுத்தினால் பேய்களுக்குத்தான் மீண்டும் பலம் கூடும்: மைத்திரிபால சிறிசேன

யாழ். ஆர்ப்பாட்டக்காரர்களை மைத்திரி நேரில் சந்தித்தார்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்