இலங்கை
Typography

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுவிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று வியாழக்கிழமை கடிதமொன்றை எழுதியுள்ளார். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தமது வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, இன்று 18வது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரையாடுவதற்காக ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் நேரம் கோரியிருந்த போதும், அது வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

Most Read