இலங்கை
Typography

வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. 

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

Most Read